மேலும் அறிய

காதல் திருமணத்தால் ஆத்திரம் : சத்து மாத்திரை என கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த தாய் : இறந்து பிறந்த குழந்தை..!

கடலூர் மாவட்டத்தில் தாயே மகளின் குழந்தையை கருவிலேயே கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் சம்மந்தம் இல்லாமல் காதல் திருமணம் புரிந்துகொண்டதால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் அப்பெண்ணின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட சோழன் நகரில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகள் தான் சுப்புலட்சுமி. 21 வயது நிரம்பிய சுப்புலட்சுமி தாதன்குட்டை என்ற தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மகன் மணிகண்டன் என்பவரை காதலித்துள்ளார். 

ஆனால் இவர்களுடைய காதலுக்கு இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சுப்புலட்சுமி 6 மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்த நிலையில் மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு அவருடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்புலட்சுமியின் தாய் அவரை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மகள் சுப்புலெட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற தாய் கஸ்தூரி, சில சத்து மாத்திரையை அவரை உட்கொள்ள கொடுத்திருக்கிறார். அவரும் தாயின் மீது கொண்ட நம்பிக்கையில் அந்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். 

அந்த மாத்திரைகளை உட்கொண்ட சுப்புலட்சுமி சில மணிநேரத்தில் கடும் வயிற்று வலியால் அலறி  துடித்துள்ளார். விஷயம் அறிந்து அங்கு வந்து கணவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக சுப்புலட்சுமியை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமணையில் மீண்டும் அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அப்போது தான் சுப்புலட்சுமிக்கும் மற்றவர்களுக்கும் தாய் கஸ்தூரி கொடுத்தது கருக்கலைப்பு மாத்திரை என்று தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தாய் கஸ்தூரி மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து தற்போது கஸ்தூரி கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகின்றது.  

தலைப்பு செய்திகள்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget