மேலும் அறிய

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

கலப்பு திருமணம் காரணமாக தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டதால் ஊரில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கருதி இரண்டு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மகள் காதலனோடு சென்று கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செட்டிமல்லன்பட்டி வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் க.சின்னத்துரை (43). விவசாயியான இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன். இதில் மூத்த மகள் கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். மகன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையின் மகள் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு சமுகத்தை சார்ந்தவர். இதனால் அவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னத்துரையின் மகள் வீட்டைவிட்டு வெளியேறி காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சின்னத்துரை மற்றும் சங்கரம்மாளுக்கு தெரியவந்ததால் இருவரும் மிகவும் வேதனையடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சங்கரம்மாள் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் அருகில் இருந்தவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சங்கரம்மாள் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சங்கரம்மாளின் கணவர் சின்னத்துரைக்கு தகவல் தெரிவிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவரது ஃபோன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என தெரியவந்தது

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

இந்நிலையில் சாயர்புரம் அருகே  அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சின்னத்துரை விஷம் குடித்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் காதல் திருமணம்.. ஸ்ரீவைகுண்டம் அருகே தாய், தந்தை தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

காதல் திருமணம் காரணமாக தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டதால் ஊரில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கருதி இரண்டு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறப்பநாடு மற்றும் சாயர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget