செங்கல்பட்டு அருகே கொடூர விபத்து.. தாய் மகள் உயிரிழப்பு.. தொடரும் ஜி.எஸ்.டி சாலை சோகம்..
Chengalpattu Accident : திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைவருக்கும் சென்றன
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - தாய், மகள் உயிரிழப்பு
சென்னை தாழம்பூர் காசா கிராண்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுதர்சன் ( 37 ). இவரது மனைவி ரஞ்சினி தம்பதியர், இவர்களுக்கு சாத்விகா (10), மனஸ்வினி(7) ஆகிய இரு மகள்கள் உள்ளன. இந்நிலையில் இன்று சுதர்சன் தனது குடும்பத்துடன் காரில் மதுராந்தகம் அருகே இவர்களுக்கு சொந்தமான மாட்டுப் பண்ணைக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
கொடூர விபத்து
அப்பொழுது செங்கல்பட்டு அருகே பழவேலி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் தனியார் நிறுவன பேருந்து ஊழியர்களை ஏற்றுச் செல்வதற்காக நின்றுள்ளது. தொடர்ந்து வந்த ஆம்னி பேருந்து, கார், கனரக லாரி என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த தாய் ரஞ்சினி மற்றும் மகள் மனஸ்வினி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்
மேலும் சுதர்சன் மற்றும் சாத்விகா ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த இருவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைவருக்கும் சென்றன.
செங்கல்பட்டு சாலையில் தொடரும் விபத்து
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், திங்கட்கிழமை காலை வேலைகளிலும் இந்த விபத்து அதிகரித்து வருகிறது. உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி, விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது