(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: இரட்டை ஆண் சிசுக்களை கொன்ற தாய்... 20 நாள்களில் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூரம்..
காவல் துறையினர் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, நகர் முழுவதும் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
மத்தியப் பிரதேசத்தில் பிறந்த 20 நாள்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தாயே கழுத்தை நெரித்துக் கொன்று வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன இரட்டை சிசுக்கள்
மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள டிடி நகரில் பிறந்த 20 நாள்களே ஆன இரண்டு ஆண் கடந்த செப்.23ஆம் தேதி காணாமல் போயின.
இந்நிலையில் சிதைந்த நிலையில் இந்த இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் முன்னதாக ஹபிப் கஞ்ச் பகுதியில் நேற்று முன் தினம் (செப்.23) கண்டெடுக்கப்பட்டது. இதனை அப்பகுதி காவல் துறை உதவி ஆணையர் வீரேந்திர மிஸ்ரா முன்னதாக உறுதி செய்தார்.
வெளியான அதிர்ச்சித் தகவல்
தொடர்ந்து இந்த இரட்டைக்குழந்தைகள் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில்,
காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்நிலையில், இந்த இரட்டை குழந்தைகளின் தாயே குழந்தைகளைக் கொன்று வீசிய அதிர்ச்சித் தகவல் முன்னதாக வெளியாகி உள்ளது.
குழந்தைகளின் தாய் சப்னா தன் இரட்டைக் குழந்தைகளைக் கொன்று சடலங்களை ஹபீப் கஞ்ச் பகுதியில் உள்ள கட்டடத்தின் பின்புறத்தில் வீசியதும், வறுமை காரணமாக இவ்வாறு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாய் வாக்குமூலம்
இவ்விவகாரத்தில் காவல் துறையினர் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, நகர் முழுவதும் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல் துறையினர் தாய் சப்னாவிடம் மேற்கொண்ட விசாரணையின்போது இந்தக் கொலை குறித்து தெரிய வந்தது. முதலில் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை கட்டிடத்தின் பின்புறத்தில் வீசியதாகவும், அப்பகுதி முழுவதும் குப்பை, புதர் மண்டி கிடப்பதால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்ததாகவும், பின்னர் டிடி நகர் காவல் நிலையத்தில் இரட்டைக் குழந்தைகளைக் காணவில்லை என்று புகார் அளித்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.
மன நலன் பாதிப்பா?
சப்னாவின் கணவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், சப்னா மனநலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன்னதாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இறந்த குழந்தைகளின் உடற்கூராய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், சப்னாவை காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை