Crime: மூதாட்டி சடலத்துடன் செக்ஸ்.. காரில் இருந்த ஆணுறையால் சிக்கிய இளைஞர்! விசாரணையில் திடுக் தகவல்!
லாரி ஏற்றி மூதாட்டியை கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சாலை விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சாலை விபத்தில் மெலடி ரோர் என்ற 64 வயது மூதாட்டி உயிரிழந்தார். இந்த சாலை விபத்து தொடர்பாக கால்பி மார்டின் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் மீது முதலில் ஒரு சாலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் புதிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆதாரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதன்படி மார்டின் மொபைல் போனில் அதிகளவில் ஆபாச படங்கள் இருந்துள்ளது. மேலும் மார்டினின் காரில் இருந்து எடுக்கப்பட்ட காண்டமில் அவரின் மரபணு மற்றும் மூதாட்டி மெலடி ரோரின் மரபணு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த மூதாட்டிக்கு விபத்து ஏற்பட்ட பிறகு அவரை மார்டின் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இந்த ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் மீண்டும் மார்டின் இடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது ஏற்கெனவே போடப்பட்டிருந்த சாலை விபத்து வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் இந்த குற்றத்தை அவர் மறைக்க முயற்சி செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சாலை விபத்து வழக்கில் பிணையில் வெளியே வந்த மார்டினை தற்போது மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில் மார்டினுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சாலை விபத்தாக இருந்த வழக்கு பின்னர் காவல்துறையினரின் விசாரணையால் பாலியல் வன்கொடுமை வழக்காக மாறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: கிஃப்ட் தரேன்.. சிறுவர்களை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை! திடுக்கிடும் தகவல்!