Mexico Bus Accident: பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து; பரிதாபமாக பறிபோன 27 உயிர்கள்..
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் 27 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டின் தலைநகரானா மெக்சிகோ சிட்டியில் இருந்து நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி அதிகாலை சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்து வந்துள்ளனர். மெக்சிகோவின் மிகவும் முக்கியமான மலைப்பாதைகளில் ஒன்றான ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் பேருந்து சென்ற போது, ஓட்டுநரின் கடுட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்த்ல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மெக்சிகோ நாட்டு காவல்துறை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறது.
இந்த விபத்தைப் போலவே, கடந்த பிப்ரவரி மாதம், கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் ஆபத்தான காட்டுப்பகுதியான டேரியன் கேப் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து, கோஸ்டாரிகாவின் எல்லையை ஒட்டிய மேற்கு கடற்கரை மாகாணமான சிரிக்கியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கரமான சத்தத்துடன் மலையில் இருந்து சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 66 பயணிகளில் 39 பேர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
சுமார் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர் என்று பனாமாவின் சமூக பாதுகாப்பு ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.