மேலும் அறிய

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்.

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்

தென்காசி மாவட்டம், இடையகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமீன் கான் வயது 21. இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் முகமது ஜமீன்கான் தனது நண்பர்களுடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்தார். இந்த நிலையில் காவிரி ஆற்றில் முகமது ஜமீன்கான் இறங்கி தனது சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால் தெரியும் இடத்தில் ஆழமான பகுதிக்கு சென்று முகமது ஜமீன்கான் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்....... காப்பாற்றுங்கள்........ என அபாய குரல் எழுப்பினர்.

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சடலமாக மீட்பு

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி முகமது ஜமீன்கானை தேடினர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கருர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு கரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் முகமது ஜமீன்கானை சடலமாக மீட்டனர். இதை அடுத்து முகமது ஜமீன்கான் உடலை மாயனூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவேரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

க.பரமத்தி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். 

லாரி டிரைவர் சாவு.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதப்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் வயது 29 லாரி டிரைவர். இவர் கடந்த 24ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பெரியதாதம்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சத்யராஜ் நின்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 62 தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று திம்மாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், குளுமணியை சேர்ந்த வினோத் குமார் வயது 30 என்பவர் ஓட்டி வந்த வேன் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget