Crime : கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் தற்கொலை...! நிர்வாகம் அளித்த தொந்தரவு காரணமா..?
உத்தர பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை:
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று, 21 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர், உத்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌசல்யா நகரை சேர்ந்த சைலேந்திர சங்க்வார் தெரியவந்தது.
மாணவர் சங்க்வாருக்கு சனிக்கிழமை தேர்வு நடைபெற இருந்தது. அவர் தேர்வு அறைக்கு வராததை அடுத்து, கல்லூரி மாணவர்கள் அவரை பார்ப்பதற்காக அவரது விடுதி அறைக்குச் சென்றனர். அப்போது, அவரின் அறை, உள் பக்கம் பூட்டப்பட்டிருப்பதை கண்டதை அடுத்து அங்கு இருக்கும் விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம்:
ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஷங்கவார், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு, அவரை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டடதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தனது மகனை கல்லூரி நிர்வாகம் தொந்தரவு செய்ததாக மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்:
மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சக மாணவர்கள் ஃபிரோசாபாத் மாவட்ட மருத்துவமனை முன், நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. பின்பு சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் படிக்க
Crime : வேறொரு நபருடன் காதல்.. காதலியை கொன்று உடலை எரித்த காதலன்...! நடந்தது என்ன...?
TN Rain Alert: உஷார் மக்களே..! 16 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போது கனமழை..! எந்தெந்த மாவட்டங்கள்...