Government School: வராத பள்ளி ஆசிரியர்கள்.. வந்ததாக வருகை பதிவு.. ஆத்திரத்தில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!
அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400 -க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 17 க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பிச்சைமணி என்பவர் நேற்று மாலை பணி மாறுதலில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றார்.
இதனை அடுத்து பணி மாறுதலில் சென்ற ஆசிரியரை வழி அனுப்பி வைப்பதற்காக இன்று பள்ளியில் உள்ள 7 ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் வந்ததாக வருகை பதிவு செய்து விட்டு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. காலாண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் ஒரே நாளில் ஏழு ஆசிரியர்கள் திடீரென பள்ளிக்கு வராமல் வந்ததாக வருகை பதிவு செய்து விட்டு, பணிமாறுதலில் சென்ற தலைமை ஆசிரியரை வழி அனுப்பிட சென்றதாக பெற்றொர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Pumpkin Puli Kulambu: மஞ்சள் பூசணிக்காயில் ஒரு சுவையான புளிக்குழம்பு செய்யலாம்.. செய்முறை இதோ
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் , பொதுமக்கள் திடீரென பள்ளியின் முன்பு திரண்டு பள்ளியில் வருகைபதிவு செய்து விட்டு வெளியில் சென்ற ஆசிரியர்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் பள்ளிக்கு நேரடியாக வந்து பள்ளிக்கு வராமல் சென்று ஆசிரியர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டார்.
Crime: அலறி துடித்த 10 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்- பஞ்சாபில் ஷாக்
அப்போது அவரிடம் இப்பிரச்சனை தொடர்பாக நிருபர்கள் விளக்கம் கேட்டபோது, பள்ளியில் ஆயிரம் நிகழ்வுகள் நடைபெறும் அதற்கெல்லாம் அனைவருக்கும் பதில் கூற முடியாது என்றும், நீங்கள் வேண்டுமானால் செய்தி போட்டுக் கொள்ளுங்கள் உங்களுக்கு பள்ளி வளகத்திற்கு வர அனுமதி இல்லை வெளியில் செல்லுங்கள் என குற்றச்சாட்டு ஆளான ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால்தான் இது போன்ற தவறுகள் குறையாமல் மேலும் மேலும் நடைபெறுகிறது என தெரிவித்தனர்.