மேலும் அறிய

"ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன்" - ஜாமீனில் வெளிவந்த பாஜக மாவட்ட தலைவருக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என்பதற்காக என் மீது ஆதாரமில்லாமல் வழக்குப்பதிவு செய்து வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும், ஆன்மீகத்திற்கு எதிராக ஒருபோதும் இருக்க மாட்டேன் என தருமபுரம் ஆதீனம் குறித்த போலி ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மயிலாடுதுறையை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்த தருமபுரம் ஆதீன கர்த்தரின் சகோதரர் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான தருமபுரம் ஆதீனம் திருமடம். இந்த ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆதீன கர்த்தரின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக கூறி பணம்கேட்டு மிரட்டியதாக ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 -ம் தேதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 

பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு

புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேர் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 16 -ம் தேதி கைது செய்யப்பட்ட பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலமுறை ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 


ஜாமீனில் வெளிவந்த பாஜக  மாவட்ட தலைவர்

அதனைத் அடுத்து இன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்திற்கு  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சித்தர்க்காடு பகுதியில் பட்டாசு வெடித்து ஆள் உயர மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கூறுகையில், தருமபுரம் ஆதீனத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நான் மிரட்டியதாக பொய்வழக்கு பதிவு செய்தனர். தருமபுரம் ஆதீனத்தின் மீது மிகப்பெரிய பற்றுவைத்துள்ளேன். பட்டினப்பிரவேசம் நடத்தக்கூடாது என்று திமுக அரசு தடைவிதித்தபோது, 24 மணிநேரம் இரவு பகல் பாராமல் உழைத்து பட்டினப்பிரவேசத்தை நடத்திகாட்டினேன். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செப்பேடுகள், உலோக சிலைகள் கண்டெடுத்தபோது நிர்வாகத்திற்கும், தருமை ஆதீனத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தேன்.


பாஜகவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டேன்

பாஜகவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டேன். நான் தேர்தலில் நிற்ககூடாது என்று என்மீது வீன்பழி சுமத்தப்பட்டது. நான் தவறு செய்திருந்தால் அதற்கான ஆவனங்களை வெளியிட வேண்டும். பாஜகவிற்கும், ஆதீனத்திற்கும் துரோகம் செய்யவில்லை. சில துரோகிகள் திட்டமிட்டு அவதூராக பழிசுமத்தியிருக்கிறார்கள். என்மீது போடப்பட்ட பொய்வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, தமிழக கவர்னரை சந்திக்க உள்ளேன். என்மீது தவறான குற்றம் சுமத்தியவர்களை சட்டரீதியாக தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்தவர், அதிமுகவை சேர்ந்தவர், ஆதீன நேர்முக உதவியாளர் என்று 4 பேர் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன்

இந்த சமுதாயத்திற்கும், தருமபுர ஆதீனத்திற்கு துரோகம் செய்யாமல், ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன். எஞ்சிய 4 பேரை கைது செய்ய வேண்டும். தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளரை காவல்துறை பிடிக்கவில்லை. அவரைப் பிடித்தால் உலகமே சிரிப்பாய் சிரிக்கும் நீங்கள் பிடிக்க மாட்டீர்கள் நான் பிடிப்பேன். என்னிடம் இருந்து கைப்பற்றியதாக கூறப்படும் வீடியோ, ஆடியோ இருந்திருந்தால் ஏன் இதுவரை காவல்துறை அதனை இன்னும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget