'ஸ்டேட் டு ஸ்டேட்' கைவரிசை காட்டிய இருவர்; கைவிலங்கு மாட்டிய காவல்துறை - சிக்கியது எப்படி...?
சிறுமியின் பெற்றோர் தங்கள் குழந்தை மீது உள்ள அக்கரை மற்றும் பாசம் காரணமாக கண்மூடி தனமாக நம்பியுள்ளனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தம்பதியினர்களின் 9 வயதான மகள், மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை சேர்ந்த இரண்டு நபர்கள் அச்சிறுமியின் பெற்றோரை அணுகி சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாகவும், 6 மாதத்தில் தங்கள் சிகிச்சை மூலம் குணமாகிவிடும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
Paralympics 2024: "தி கோட்" பாராலிம்பிக்கில் ஒலித்த விரட் கோலி பெயர்! வைரல் வீடியோ
ரூ.84 ஆயிரம் மோசடி
அந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் குழந்தை மீது உள்ள அக்கரை மற்றும் பாசம் காரணமாக கண்மூடி தனமாக நம்பியுள்ளனர். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சிகிச்சைக்காக 84 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டு பெற்று சிகிச்சைக்கான வேலைகளை துவங்குவதாக கூறி பணம் வாங்கி சென்ற அந்த இருவரும் மீண்டும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானதை அறிந்து, மணல்மேடு காவல் நிலையத்தில் இது குறித்து அளித்தனர். அந்த புகாரின் பேரில் மணல்மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
TVK Manadu: தவெக முதல் மாநாடு... போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதிலை தயார் செய்த தலைவர் விஜய்?
புதுக்கோட்டையில் சுற்றி திரிந்த குற்றவாளிகள்
இந்நிலையில், சிறுமியின் பெற்றோரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்து தலைமறைவாகி, புதுக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த இரண்டு நபர்களையும் தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்து மணல்மேடு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூர், லே பாக்ஸ் பகுதியைச் சேர்ந்த சிவப்பா என்பவரது மகன் 42 வயதான மஞ்சுநாதன் மற்றும் சன்னப்பா மகன் 44 வயதான அன்னப்பா என்பது தெரியவந்தது.
நிலமோசடி வழக்கு: எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்
தொடர்ந்து, அவர்களை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்தி, பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவம் பார்ப்பதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.