சினிமா பாணியில் கொள்ளை! குடும்பத்திற்காக முன்னாள் முதலாளியிடம் ரூ.14 லட்சத்தை திருடிய வாலிபர்!
உத்தரபிரதேசத்தில் தங்கை திருமணம் மற்றும் அப்பாவின் கடனுக்காக முன்னாள் முதலாளியிடம் இளைஞர் ரூபாய் 14 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் வசித்து வருபவர் நமன். இவரது ஓட்டுனர் கவுதம். இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஹைதர்பூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். நமன் தொழிலதிபராக உள்ளார். அவர் தனது பையில் ரூபாய் 14.5 லட்சம் வைத்திருந்தார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
ரூ.14.5 லட்சம் கொள்ளை:
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் நமன் மற்றும் கவுதமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென வந்த இரண்டு பேர் நமனின் பையைத் திருடிச் சென்றனர். இதனால், நமன் மற்றும் அவரது ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து, நமன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது நமனிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்தது.
முன்னாள் ஊழியர் அரங்கேற்றியது அம்பலம்:
நமனிடம் பணியாற்றியவர் கௌதம். அவருக்கு வயது 20. அவரது அண்ணன் குட்டு ( வயது 23). அவரது நண்பர்கள் குணால் அவருக்கு வயது 23. அவரது நண்பர் சுமித். அவருக்கு வயது 19. கௌதம் நமனிடம் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றி வந்துள்ளார். பின்னர், அவர் வேலையில் இருந்து விலகிவிட்டார்.
இந்த சூழலில், கௌதமின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கௌதமின் சகோதரிக்கு திருமண செலவு, மற்று்ம அவரது தந்தை வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க வேண்டிய சூழல் என கடும் பொருளாதார நெருக்கடியில் கௌதம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற கௌதம் முடிவு செய்துள்ளார்.
பின்னர், தனது நண்பர்கள் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். போலீசார் தற்போது குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 11.56 லட்சம் பணத்தையும், இரண்டு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னாள் முதலாளியிடம் தங்கை திருமணம் மற்றும் அப்பாவின் கடனுக்காக இளைஞர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் இருந்து குற்றவாளிகள் ரூபாய் 3 லட்சம் வரை செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.