மேலும் அறிய

சாப்பாடு பரிமாறாத ஆத்திரம்.. மனைவியை கொலை செய்ய தூண்டிய பசி.. தொழிலாளி கைது!

கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். ஆனால் மனைவியோ சாப்பாடு பரிமாற சொல்லியும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் டேபிள் ஃபேனால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வரும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது மனைவி அமுதாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 14) கணேசன் காலையில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2.30  மணியளவில் அவருக்கு பசி அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். தனது மனைவி அமுதாவிடம் சாப்பாடு பரிமாற சொல்லியுள்ளார். 

ஆனால் மனைவியோ கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கணேசன் இரண்டு, மூன்று முறை சொல்லியும் அமுதா அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஏற்கனவே கடும் பசியில் இருந்த கணேசனுக்கு மனைவியின் நடத்தை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை எடுத்து அமுதாவின் தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அமுதா அலறி துடித்த நிலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரின் அலறக் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு அமுதா உயிரிழந்து கிடப்பதையும், அருகில் இரத்தக்கறையுடன் கூடிய டேபிள் ஃபேனுடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அமுதா சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், மருந்துகளை உட்கொண்டதாகவும் தெரிய வந்தது. அதனால் கணேசன் சொன்னதை காதில் வாங்காமல் அவர் இருந்ததால் ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இளைஞர் தற்கொலை 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பிப்ரவரி 13ம் தேதி மின்சார ரயிலில் இளைஞர் ஒருவார் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக அந்த இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக தனது நண்பர்களை கான்பரன்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு தண்டவாளத்தில் இருப்பதாகவும், தற்கொலை செய்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget