மேலும் அறிய

Crime: “எனக்கு வரதட்சணையா நகை வேணும்” .. மாமியாரிடம் கோபித்துக் கொண்டு மருமகன் செய்த செயல்..!

தெலங்கானா மாநிலத்தில் மாமியாரிடம்  வரதட்சணை கேட்டு மின்கம்பத்தில் மருமகன் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தில் மாமியாரிடம்  வரதட்சணை கேட்டு மின்கம்பத்தில் மருமகன் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பலருக்கும் கல்யாணம் என்பதே கனவாக உள்ளது. அப்படியே நடந்தாலும் வாழ்க்கையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டு செல்கிறோமா என்றால் இல்லை. சந்தேகம், திருமணத்தை மீறிய உறவு, வரதட்சணை உள்ளிட்ட பல பிரச்சினைகள் திருமண வாழ்க்கையையே சிதைக்கின்றன. தினந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த வகையில்  தெலங்கானா மாநிலத்தில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மேதக் நகரை சேர்ந்த  சேகர் என்பவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பிறந்த வீட்டில்  சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் தனக்கு சீர்வரிசை வேண்டுமெனவும், நகைகள் போட வேண்டும் எனவும் மாமியாரிடம் சேகர் அடிக்கடி  கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளார். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்து கோபமடைந்த சேகர் மீண்டும் நேற்று மாமியார் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது நகை வேண்டுமென்று கேட்க, மாமியார் மறுப்பு தெரிவித்துள்ள்ளார். 

இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சேகர், அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் ஏறி உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சேகரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாமியார் நகைகள் கொடுக்க சம்மதித்தால் கீழே வருவதாக கூறினார்.

நீண்ட போராட்டத்திற்கு பின் சேகரை சமாதானப்படுத்தி கீழே இறக்கிய போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை மட்டுமல்ல, இதுபோன்ற விபரீதமான முயற்சிகளும் என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget