மேலும் அறிய

சினிமா பட பாணியில் அண்ணாமலையார் கோவில் உண்டியல் பணம் திருட்டு - மதுரையை சேர்ந்தவர் கைது

‘குட்டி புலி’ திரைப்படத்தில் கோவில் உண்டியலில் குச்சியை நுழைத்து நூதன முறையில் காணிக்கை பணத்தை திருடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சினிமா பட பாணியில் காணிக்கை உண்டியலில் குச்சியை விட்டு பணம் திருடிய மதுரையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலில் காவி உடையணிந்து மொட்டை அடித்த நிலையில் இருந்த நபர் குச்சி ஒன்றை உள்ளே செலுத்தி காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்வது போன்று கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இதை கண்ட கோவில் அலுவலர்கள் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான நபரின் புகைப்படத்துடன் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

சினிமா பட பாணியில் அண்ணாமலையார் கோவில் உண்டியல் பணம் திருட்டு - மதுரையை சேர்ந்தவர் கைது

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் ஏற்கனவே பணம் திருடிய உண்டியல் அருகே சென்று மீண்டும் பணம் திருட முயன்றுள்ளார். இதை கண்டதும்  மறைந்திருந்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை கையும் களமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி வயது (32), இவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் கடந்த மாதம் 28-ம் தேதி கடந்த எட்டாம் தேதியும் சுவாமி தரிசனம் செய்வதுபோல் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் காணிக்கை உண்டியலிடம் சென்று பசை தடவிய குச்சி ஒன்றை எடுத்து உண்டியலுக்குள் செலுத்தி 2000 ரூபாயை திருடியதை ஒப்புக்கொண்டார்.

சினிமா பட பாணியில் அண்ணாமலையார் கோவில் உண்டியல் பணம் திருட்டு - மதுரையை சேர்ந்தவர் கைது

அந்த பணத்தை செலவழித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இவருடைய மனைவி இவரை பிரிந்து வாணியம்பாடியில் வசிப்பதாகவும், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சுந்தரபாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற சம்பவம் குட்டி புலி திரைப்படத்தில் கோவில் உண்டியலில் குச்சியை நுழைத்து நூதன முறையில் காணிக்கை பணத்தை திருடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த பாணியில் திருவண்ணாமலை கோவில் உண்டியலில் காணிக்கை பணத்தை மதுரையைச் சேர்ந்த நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget