மேலும் அறிய

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!

அடிக்கடி வீட்டில் இருந்து மகன்களின் அலறல் சத்தம் கேட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இரு குழந்தைகள் நிலையைப் பார்த்து ஷாக்காகினர்.

தெலங்கானா மாநிலத்தில் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறாக மகன்கள் இருப்பதாக பெற்றோர் இரும்பு கம்பியால் அடித்து, சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் சூர்யபேட்டையில் தான் நடைபெற்றுள்ளது. அங்கு நகிரிகாந்தி ரவி என்பவர் தனது மனைவி இந்துவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் தனுஷ் மற்றும் 2 வயதில் ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். நகிரிகாந்தி ரவி லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இப்படியான நிலையில் சமீபகாலமாக பெற்றோர்களின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்துள்ளது.

அடிக்கடி வீட்டில் இருந்து மகன்களின் அலறல் சத்தம் கேட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் ஆகியோரோடு போலீசாரும் தீவிரமாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். 

உடனடியாக நகிரிகாந்தி ரவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு இரு குழந்தைகள் உடலில் தீயினால் சுட்ட காயங்கள், நகக்கீறல்கள், அடித்ததால் ஏற்பட்ட தழும்புகள் என இருந்துள்ளது. அதேசமயம் இளைய மகனுக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து நகிரிகாந்தி ரவி மற்றும் இந்து ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, “ரவி ஏற்கனவே திருமணமான நிலையில் தனது முதல் மனைவியிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவரான இந்துவை மணந்துள்ளார். இரு மகன்களில் ஒருவர் கடந்த திருமண வாழ்வில் இந்துவுக்கு பிறந்தவன். இதனால் அந்த குழந்தை மட்டுமல்லாமல் தங்களுக்குப் பிறந்த இளைய குழந்தையும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியுள்ளனர். 

Also Read: Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

இதனால் விரக்தியில் குழந்தைகளை சரமாரியாக தாக்கியதாகவும், கரண்டியை பழுக்கக் காய்ச்சி மீண்டும் மீண்டும் சூடு போடுதல், சிகரெட்டால் சூடு வைத்தல், வார்த்தைகளால் காயப்படுத்துதல் போன்ற  கொடூர செயல்களில் ஈடுபட்டனர் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎன்எஸ் சட்டத்தின்படி சிறார் நீதி மற்றும் குழந்தைகள் பரமாரிப்பு, பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற குழந்தைகள் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பலரும் குழந்தைகளுக்காக தவம் கிடக்கும் நிலையில் அற்ப சந்தோசத்திற்காவும், சுதந்திரத்துக்காவும் எப்படி இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மனம் வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget