மேலும் அறிய

Madurai Student Death: மொபைல் போனை சார்ஜரில் வைத்து வீடியோ கேம் விளையாடிய பிளஸ் 1 மாணவர் மின்சாரம் தாக்கி பலி

மொபைல் போனை சார்ஜரில் போட்டபடி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

மதுரை பாலமேடு அருகே செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி 11ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கருப்பனகுமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஊரடங்கு காலம் என்பதால் ஆன்லைன் வகுப்பிற்காக கருப்பணக்குமாருக்கு அவரது பெற்றோர் மொபைல் போன் வாங்கித் தந்துள்ளனர். படித்த நேரம் போக, மற்றநேரங்களில் கேம் விளையாடவும், நண்பர்களுடன் ஷாட் செய்யவம் கருப்பணகுமார் மொபைல் போனை பயன்படுத்தி வந்துள்ளார். 

நேற்று மாலை நீண்ட நேரம் நண்பர்களுடன் ஷாட் செய்த கருப்பணக்குமார், பின்னர் வீடியோ கேம் விளையாடியுள்ளார். அதனால் மொபைல் போன் சார்ஜர் இல்லாமல் போயுள்ளது. ஆர்வத்தில் அதை அவர் கவனிக்காத நிலையில், சிறிது நேரம் கழித்து சார்ஜ் இல்லாததை கவனித்துள்ளார். உடனே தன் வீட்டில் சார்ஜரில் போட்டபடி வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து, கருப்பணக்குமார் தூக்கிவீசப்பட்டுள்ளார்.

Madurai Student Death: மொபைல் போனை சார்ஜரில் வைத்து வீடியோ கேம் விளையாடிய பிளஸ் 1 மாணவர் மின்சாரம் தாக்கி பலி

மயங்கி கிடந்த கருப்பனகுமாரை மீட்ட உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே பரிதாபமாக மாணவர் கருப்பனகுமார் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி மாணவர் இறப்பு குறித்து பாலமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு செல்போன் பயன்பாட்டை பெற்றோர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இது ஆன்லைன் கல்வி காலம் என்பதால் மொபைல் போன் மாணவர்களுக்கு தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதே நேரத்தில் கல்வியை தவிர்த்து பிற பயன்பாட்டிற்கு அது வரும் போது தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. சார்ஜ் செய்வது உள்ளிட்ட அன்றாட பணிகளை பெற்றோரே முடித்து விட்டு, பயன்பாட்டிற்கு மட்டும் மாணவர்களிடம் மொபைல் போனை தர பெற்றோர் முன்வர வேண்டும். அவர்களின் கல்வி பணி முடிந்ததும் மொபைல் போனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget