மேலும் அறிய

உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்

கள்ளக்காதல் விவகாரம்: திருப்பத்தூரில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை; தவெக பிரமுகர் கைது!

திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆண், பெண் வெட்டி படுகொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி பகுதியில் மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, தனியார் பிளாட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே ஆண், பெண் இருவரும் ரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


- சொ

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், திருவிக.நகர் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகள் மாலினி (31) என்பவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம், திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் மகன் சிரஞ்சீவிக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தையும், 11 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில். மாலினிக்கு பள்ளி பருவத்திலேயே சஞ்சீவ் காந்தி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது‌. இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ரஞ்சித் (30), மாலினிக்கு அக்கா முறை உறவினர் என கூறப்படுகிறது. இவர்களுக்கிடையேயும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாலினியும் ரஞ்சித்தும் தோரணம்பதி பகுதியில் உள்ள தனியார் பிளாட்டில் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த சஞ்சீவ் காந்தி, மாலினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற ரஞ்சித்தை சஞ்சீவ் காந்தி தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து ஆத்திரமடைந்த சஞ்சீவ் காந்தி, மாலினியையும் தலை, கழுத்து, கை, மார்பு, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்‌.

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி முரளி தலைமையில் தனிப்படை அமைத்தனர்‌. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சஞ்சீவ் காந்தியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாலினி மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கிடையே பழக்கம் இருந்ததாகவும் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், சஞ்சீவ் காந்தி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி என  கூறப்படுகிறது. போலீசார் சஞ்சீவ் காந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் தனியார் பிளாட்டில் ஆண், பெண் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
Hyundai Verna: ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
Embed widget