Madhya Pradesh News: ‘என்னோட டிரஸ், நகை திருடும் கண்ணுக்கு தெரியாத திருடன்’ - பெண் புகாரால் அதிர்ந்த போலீஸ்..!
கடந்த நான்கைந்து நாட்களாக நடந்ததாகக் இந்த திருட்டு சம்பவம் நடந்ததாக கூறிய அப்பெண், காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
'கண்ணுக்கு தெரியாத சக்தி' தனது பொருட்களை திருடுவதாக பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்த ருசிகர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இந்த புகாரை கேட்டவுடன் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நகைகளின் எடை குறைவதோடு, தனது உடைகள், பணம் மற்றும் உணவை ஏதோ "கண்ணுக்கு தெரியாத சக்தி" (invisible force) திருடுவதாகக் கூறி காவல்துறையிடம் சென்றதாக அதிகாரிகள் கூறினார்கள். புகார் அளித்தவர் பிரதமர் கிராமப்புற சாலை இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட துணை பொறியாளர் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க: Jayant Yadav: ஜெயந்த் வந்தால் ஜெயமே... அன்று சதம்... இன்று விக்கெட்... வான்கடே வதம்... யார் இந்த ஜெயந்த் யாதவ்?
"அடையாளம் தெரியாத சக்தி தனது உணவை சாப்பிடுவதாகவும், தனது ஆபரணங்களின் எடையைக் குறைப்பதாகவும் கோட்வாலி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்" என்று காவல் நிலையப் பொறுப்பாளர் ரத்னாகர் ஹிங்வே கூறினார்.
கடந்த நான்கைந்து நாட்களாக நடந்ததாகக் இந்த திருட்டு சம்பவம் நடந்ததாக கூறிய அப்பெண், காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். மேலும் படிக்க: மேலும் படிக்க:Watch Video: ‛ஆர்.எஸ்.எஸ்., போல சேவை செய்ய விரும்புகிறேன்...’ வடிவேலு மகன் பரபரப்பு பேட்டி!
ஆனால், போலீசார் அப்பெண்ணின் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அந்தப்பெண்ணிற்கு (hallucinating) மாயத்தோற்றம் இருப்பதாகவும், ஆலோசனைக்காக மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படுவார் என்றும் கூறினர். Covid 19 : மாஸ்க் மாட்டுங்க.. இல்லன்னா வழக்குதான் பாயும்.. சென்னையில் கடுமையாகும் ரூல்!
"ஆபரணங்களின் எடை அவற்றின் பயன்பாட்டின் காரணமாக காலப்போக்கில் சில மில்லி கிராம்களால் தானாகவே குறைகிறது என்பது அறியப்பட்ட உண்மை" என்றும் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் படிக்க: Tomato Price in Chennai: தக்காளிக்கு அக்காவாகும் முருங்கைக்காய்: போட்டி போட்டு விலை ஏற்றம்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்