மேலும் அறிய

தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

தலை, சுவரில் மோதி பாரதி சம்ப இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறி, பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கா முனியப்பன் மகன் மாரேகவுடு வயது ( 38) இவர் விவசாயி. இவருடைய மனைவி பாரதி (28). ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்று  இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தம்பதி இருவருக்கு இடையே  அடிக்கடி கருத்துமுரண்பாடுகள் வழக்கமாக ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்  கடந்த 26-ம் தேதி மாலை இருவர்களுக்கிடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது . இந்த தகராறு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனமுடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரேகவுடு அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார். 
 
தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

இதனையறிந்த பாரதியின் தந்தை பைரப்பா,  தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில்  புகார் செய்தார். அதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக காடுமுச்சந்திரம் கிராமத்திற்கு சென்று இறந்த பாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.

 மேலும் மருத்துவமனையின் பிரேத பரிசோதனையின் முடிவில், பாரதியின் உடலில் அடித்ததற்கான உள்காயங்கள் உள்ளன எனவும். இவர் தூக்கு போட்டு இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது என பிரேத பரிசோதனை சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது.  இதனையடுத்து கணவர் மாரேகவுடை சந்தேகத்தின் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

காவல்துறை விசாரணையில் பாரதிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரதியிடம் கணவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாரேகவுடு,  மனைவியை சரமாறியாக அடித்துள்ளார். அப்போது பாரதியின்  தலை சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாரதி சம்ப இடத்திலேயே இறந்து விட்டதும், இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சகோதரர்கள் பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அண்ணன், தம்பிகளான மாரேகவுடு, சூடேஷ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடியதும், அதற்கு கணவரின் தம்பி உதவியாக இருந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராத உறவால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.தாய்-தந்தை இடையே ஏற்பட்ட மோதலில் அவர்களது குழந்தைகள் தற்போது நட்டாத்தில் நிற்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget