மேலும் அறிய

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி சிரஞ்சீவி (23)  வக்கீல் லே-அவுட் பகுதி வழியாக நடந்து சென்றபோது எதிரில் வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1,500 பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரித் (25) என தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

இதனை தொடர்ந்து ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முனியப்பன் (30)  சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அதே போல் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த காவலாளி செல்வகுமார் (44).  ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து செல்வகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து 3 வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வழிப்பறி திருடர்களையும் கைது செய்த ஓசூர் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget