மேலும் அறிய

கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்வில் தோல்வி; மனஉளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை

ஊத்தங்கரை அருகே +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மாநிலம் முழுவதும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டார். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டு முடிக்கப்பட்டன. இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைந்தது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்று (ஜூன் 20ஆம் தேதி) காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 


கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்வில் தோல்வி; மனஉளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை

 

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 12ஆம் வகுப்பு மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருடைய மகள் காவ்யா வயது (17). இவர் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவு தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில்  மாணவி காவ்யா தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி காலை முதலே வீட்டில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் மற்றும் மாணவியின் நண்பர்கள் அனைவரும் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், அன்று மாலை மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

 


கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்வில் தோல்வி; மனஉளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு !! தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு !! தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
காதலன் ஆசைப்பட்ட பைக்...தோழி வீட்டில் 9 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவி - சிக்கியது எப்படி ?
காதலன் ஆசைப்பட்ட பைக்...தோழி வீட்டில் 9 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவி - சிக்கியது எப்படி ?
பணம் , கொடுக்கல் வாங்கல் தகராறு !! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெயிண்டர்
பணம் , கொடுக்கல் வாங்கல் தகராறு !! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெயிண்டர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget