மேலும் அறிய

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு

போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை விழுந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்திய போது பாஜகவினர் -போலீசார் இடையே  மோதல் ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோரை பாஜகவினர் தாக்கியதில் படுகாயமடைந்தனர். இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நகர பாஜக தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அ. ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது. 

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு

இந்து முன்னணி போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர்  ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு

அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை பாஜகவின் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகி ரகு பாபு உள்ளிட்ட சிலர்   சட்டையை கிழித்து தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி  சென்றதில் பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்த போலீஸ்க்கு அடி உதை - கோவில்பட்டியில் பரபரப்பு

காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏடிஎஸ்பி கார்த்திகேயன்  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வாளர் சுஜித் ஆனந்த் காவலர் பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில்  200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜக நகர தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். போஸ்டர் ஒட்டியதை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை விழுந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget