மேலும் அறிய

கொடுங்கையூர் விசாரணைக் கைதி இறப்புக்கும் காவல் துறைக்கும் சம்பந்தமில்லை – கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

சென்னை, கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில்,உடலில் இருந்த காயங்களால் இறக்கவில்லை என உடற்கூராய்வு தெரிவிப்பதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

சென்னை, கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில்,உடலில் இருந்த காயங்களால் அவர் இறக்கவில்லை என உடற்கூராய்வு தெரிவிப்பதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ராஜசேகரின் உடற்கூராய்வில் நான்கு காயங்களை மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதில் ஒன்று மூன்று முதல் ஐந்து நாட்களில் ஏற்பட்ட காயம், இரண்டு காயங்கள் 18 முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்டது எனவும், ஒரு காயம் மட்டும்  24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட காயம் எனவும் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறை ராஜசேகரை விசாரணைக்கு அழைத்து வந்த 10 மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்பது நான் ஏற்கனவே ஊடகங்களில் கூறியிருந்தேன். இந்த உடற்கூராய்வின் மூலம் ராஜசேகரின் இறப்பிற்கும் காவல் துறைக்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

                                                                                     

ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றம்

 சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர்  உயிரிழந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ராஜசேகர். இவரது பேரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை விசாரணை செய்ய வேண்டுமென கூறி, காவல் நிலைய அதிகாரிகள் காவல்நிலையத்தில் வைத்து அவரை விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் காவல்நிலையத்தில் இருந்த ராஜசேகருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் ராஜசேகர் இறந்து விட்டதாக கூறி  அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம் 

இதனையடுத்து ராஜசேகர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ராஜசேகர் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேக மரணமடைந்துள்ள ராஜசேகர் மீது சோழவரம் காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், வியாசர்பாடி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மணலி புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், திருநின்றவூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget