மேலும் அறிய

சந்தேகத்தால் மனைவி கொலை.. பாபநாசம் பட பாணியில் புதைத்த கணவன்.. ஒன்றரை வருடம் கழித்து சிக்கியது எப்படி..?

கேரளாவில் மனைவியை கொலை செய்து, வீட்டு வாசலிலேயே கணவர் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படம் இளைஞர் ஒருவரை கமல்ஹாசன் குடும்பம் கொலை செய்துவிட்டதும், அவரை கமல்ஹாசன் காவல்நிலையத்திற்கு கீழேயே புதைப்பதும் போன்று காட்சி இருக்கும். தற்போது அதேபாணியில் மனைவியை கொலை செய்து, வீட்டு வாசலிலேயே கணவர் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

சந்தேகத்தால் விபரீதம்

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் சஞ்சீவன்(38). இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 8 வயதிலும், 6 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில நாட்களுக்கு பின் மனைவி ரம்யா மீது சஞ்சீவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளிநபர்களுடன் பேசக் கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது போன்ற நிபந்தனைகளை சஞ்சீவ் விடுத்தார். இதனால் ரம்யா கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினார் என்று கூறப்படுகிறது.

கட்டையால் அடித்து கொலை

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரம்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சஞ்சீவன் சண்டை போட்டுள்ளார். இதனால் கடும் கோபடைந்த ரம்யா சஞ்சீவனை கடுமையாக பேசியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் சஞ்சீவன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ரம்யாவின் தலையில் அடித்துள்ளார். இதனால் ரம்யா உயிரிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

கொலை செய்தது தெரியாமல் இருக்க ரம்யாவின் உடலை மறைக்க முடிவு செய்தார். அதனால் ரம்யாவின் உடலை வீட்டு வாசலிலேயே குழிதோண்டு புதைத்துள்ளார். அதன் பின்பு, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை அம்மா எங்கு என்று கேட்க, அதற்கு சஞ்சீவன் அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதன்பின், தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, ரம்யாவின் பெற்றோர்கள் சஞ்சீவன் மீது சந்தேகப்பட்டு அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ஒன்றரை வருடங்களுக்கு பின் கைது

தற்போது இந்த வழக்கில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சஞ்சிவனிடம்  தீவிர விசாரணை நடத்தியதால் அவர் ஒப்புக்கொண்டார். இதன்பின், சம்பவ இடத்திற்கு ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சீவனை போலீசார் 18 மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

நிர்வாண வீடியோ கால் ஆசை.. பெண்ணின் பொறியில் சிக்கிய தொழிலதிபர்... கோடிக்கணக்கில் பணம் அபேஸ்..!

Crime: இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்? - சேலம் மத்திய சிறை வார்டன்கள் இருவர் கைது

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget