மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Kerala Human Sacrifice : கேரளா நரபலி: பெண்ணை 56 பாகங்களாக வெட்டி சாப்பிட்ட கொடூரம்?...பகீர் கிளப்பும் தகவல்கள்..

நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் இன்று அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர்.

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சூழலில், இது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் இன்று அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்துள்ளனர். அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை காவல்துறை தலைமையே பகிர்ந்துள்ளார்.

முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, குற்றம்சாட்டப்பட்ட பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு, 75 வயதான பெண் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஷஃபி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆபாசப் படத்தில் நடிக்க பணம் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை ஷபி அழைத்து வந்துள்ளார்.

அதே நேரத்தில், பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோரின் நிதிக் கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பணக்காரர்களாகவும் ஒரு நரபலியை நடத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து கேரள காவல்துறை தலைவர் சி.எச். நாகராஜு பேசுகையில், "பாதிக்கப்பட்டவர்களைக் கொன்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலின் பாகங்களைச் சாப்பிட்டிருக்கலாம். இது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்றார். பகவல் சிங், மசாஜ் தெரபிஸ்ட்டாக உள்ளார். சமூக வலைதளங்களில், அவருக்கு என பின்தொடர்பாளர்கள் உள்ளனர். மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.

ஜூன் மாதம் ரோஸ்லினும் செப்டம்பர் மாதம் பத்மாவும் காணாமல் போயுள்ளனர். பத்மா காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் ஃபோன்கள் ஷாபியிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற கார் ஆகியவற்றின் உதவியுடன் அவரைக் கண்டுபிடித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக பத்தனம்திட்டாவில் உள்ள வீட்டிற்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பகவல் சிங்கும் அவரது மனைவியும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget