மேலும் அறிய
Advertisement
விலக மறுத்த முதல் காதலன்: இரண்டாவது காதலனுடன் சேர்ந்து பட்டப்பகலில் குத்திக் கொன்ற காதலி!
பட்டப்பகலில் தேசப்பிரிய மற்றும் தேசப்பிரியவின் நண்பர் அருண் பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை வயிற்றுப்பகுதி மற்றும் மார்பகம்,முகம் என சரமாரியாக குத்தினர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கேளம்பாக்கம் அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் , திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தேசப்பிரியா (26 ) பி.எச்.டி என்னும் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். மாணவி தேசப்பிரியா இதற்கு முன்பு பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் பகுதியை சேர்ந்த செந்தில் (41) என்பவருக்கு தேசப்பிரிய என்ற பெண்மணியிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செந்திலுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் ஆகியும் செந்திலுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட நட்பு அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தும், மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாணவி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது . தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தன்னிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், ஆனால் தொடர்ந்து தன்னுடன் இருக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பொத்தேரி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவருடன் தேசப் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒரு புறம் செந்தில் தன்னுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தி வந்ததால், மனவேதனை அடைந்த கல்லூரி மாணவி தேசப்பிரிய செந்திலுக்கு செல்போன் மூலம் பேசி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வரவழைத்துள்ளார். பட்டப்பகலில் தேசப்பிரிய மற்றும் தேசப்பிரியவின் நண்பர் அருண் பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை வயிற்றுப்பகுதி மற்றும் மார்பகம்,முகம் என சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் செந்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
செந்திலை குத்திவிட்டு தப்பி ஓடிய தேசப்பிரிய மற்றும் அவரது நண்பன் அருண் பாண்டியன் ஆகியோரை அப்பகுதி மக்கள் பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கல்லூரி மாணவி மற்றும் அவரது நண்பனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே வாகன ஓட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்படி தனக்குத் தொந்தரவு கொடுத்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மாணவி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான மாணவி தேசப்பிரிய மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion