மேலும் அறிய

கரூரில் கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை - மனஅழுத்தம் காரணமா..?

குடும்ப பிரச்னை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மோகனாம்பாள், தானாக உளறிக்கொண்டிருப்பதாக கூறி, நல்லிசெல்லிபாளையத்தில் மாமியார் ராணி வீட்டில் சிவானந்தம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கரூரில் தனது இரண்டு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


கரூரில் கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை - மனஅழுத்தம் காரணமா..?

கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(33). இவர், கட்டிடம் கட்டும் வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மோகனாம்பாள் (32) என்ற மனைவியும், 6 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை மற்றும் பிறந்து 37 நாட்களான மற்றொரு ஆண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளன. தற்போது சிவானந்தம் குடும்பத்துடன் மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனி, அம்மன் நகரில் வசித்து வருகிறார்.


கரூரில் கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை - மனஅழுத்தம் காரணமா..?

இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மோகனாம்பாள், தானாக உளறிக்கொண்டிருப்பதாக கூறி, நல்லிசெல்லிபாளையத்தில் உள்ள மாமியார் ராணி வீட்டில் நேற்று முன்தினம் காலையில் சிவானந்தம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை சிவானந்தத்தை செல்போனில் அழைத்த மோகனாம்பாளின் அக்கா ஜானகி, தனது தங்கையை காணவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து சிவானந்தம் மற்றும் உறவினர்கள் தேடியபோது அங்குள்ள தனியார் தோட்டத்து கிணற்றின் அருகே மோகனாம்பாளின் செருப்பு மட்டும் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதி, இது குறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


கரூரில் கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை - மனஅழுத்தம் காரணமா..?

இதனையடுத்து இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை போலீசார் கரூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் மோகனாம்பாளின் உடலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருமணமாகி 7 ஆண்டுக்குள் இளம்பெண் இறந்ததால், இது குறித்து  கரூர் கோட்டாச்சியர் ரூபினா மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு சென்று மோகனாம்பாளின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்திய பின்னரே, பிரேத பரிசோதனை நடத்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget