திருடி சென்ற கடையின் சிசிடிவி முன்பு முகமூடி திருடன் செய்த வேலை - வீடியோவில் அதிர்ச்சி
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், பணத்தை திருடினார்.
பள்ளப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் புகுந்து லேப்டாப், பணம், உதிரி பாகங்களை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.02.2023 அதிகாலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், பணம் மற்றும் உதிரிபாகங்களை திருடிச் சென்றுள்ளார். காவல்துறை தரப்பில் திருடு போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெராக்ஸ் கடையில் இருந்த பொருட்களை திருடி சென்ற கொள்ளையன் அங்கிருந்த சிசிடிவி கேமரா முன்பு நின்று செல்ஃபி எடுத்து சென்றுள்ளான்.
மேலும், முகமூடி அணிந்த நபர் இரண்டு சட்டைகளில் காணப்படுவதால் கொள்ளையன் ஒரு நபரா? இருவரா?என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த திருட்டு சம்பவ வீடியோ வெளியானதால் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்