மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை - கரூரில் சோகம்
குடிப்பழக்கம் உடைய குமரகுரு மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார்.
மனைவியுடன் தகராறு காதல் கணவர் தற்கொலை
கரூர் செல்லாண்டிபாளையத்தில் வசிப்பவர் சசிகலா இவர் கணவர் குமரகுரு. இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடிப்பழக்கம் உடைய குமரகுரு வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று சசிகலா பழனியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது குமரகுரு வீட்டில் தூக்கு மாட்டி இறந்தார். இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை சப் இன்ஸ்பெக்டர் மணிசேகரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
முதியவர் தற்கொலை.
கரூர், புலியூர், பி. வெள்ளாளம்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கணவர் நல்லசிவம். போதைக்கு அடிமையாக இருந்த இவர் வீட்டில் தூக்கிட்டு இறந்தார். விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து நல்லசிவத்தின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகிறார்.
கல்லூரி மாணவி சாவு
குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பாப்பக்காம்பட்டி சேர்ந்தவர் அன்பழகன் இவரது மகள் தமிழ்மணி. அய்யர்மலை அரசு கலைக்கல்லூரி பிபிஏ 3ம் ஆண்டு மாணவி. கடந்த சில நாட்களாக தமிழ்மணி தலைவலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 5ம் தேதி மீண்டும் தமிழ்மணியை வயிற்று வலிக்கு சிகிச்சை பெற திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற தமிழ்மணி இறந்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.