கரூரில் வாலிபர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை
நச்சலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி கோரை காளான் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 39. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வகுமார் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளனர். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்வகுமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி மரணம்
இதேபோல் நச்சலூர் அருகே உள்ள மேல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி இவரது மனைவி மீனாட்சி 75 இந்த நிலையில் பெரியசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சரியாகவில்லை என கூறப்படுகிறது. மீனாட்சி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மினாச்சி மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதேபோல் நாமக்கல் மாவட்டம் க பரமத்தி வேலூர் செருக்கலை பகுதியைச் சேர்ந்தவர் இவரது மனைவி முத்துலட்சுமி 60 இவர் கடந்த ஒரு ஆண்டாக கணவனைப் பிரிந்து மகன் சந்தானத்துடன் கரூர் மாவட்டம் இடுங்கூர் புதுப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் நடராஜன் கால்கள் மற்றும் கண்பார்வை பாதிக்கப்பட்ட இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை நடராஜன் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்தும் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
குளித்தலை அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருங்காலப்பள்ளி அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஹேமா டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிப் பார்த்தோம், விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ஹேமாவை தேடி வருகின்றனர்.