(Source: ECI/ABP News/ABP Majha)
Prajwal Revanna: கர்நாடக பாலியல் புகார்: வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா? ஆஜராக திட்டம்... பேசியது என்ன?
Prajwal Revanna Video: கர்நாடக பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அரசியல் சதி எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கர்நாடக பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்படும் பிரஜ்வல் ரேவண்ணா, வரும் மே 31 ஆம் தேதி, சிறப்பு புலனாய்வு குழுவில் விசாரணைக்கு ஆஜராவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா:
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்ததாவது, ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடந்தபோது, என் மீது எந்த வழக்கும் இல்லை, சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்படவில்லை, எனது வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
எனது பயணத்தில் இருந்தபோது குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்தேன். ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனக்கு எதிராகவும் ஒரு அரசியல் சதி உருவாகியிருக்கிறது. மே 31 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நான் சிறப்பு புலனாய்வு குழு SIT முன் ஆஜராகி, விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவேன். விசாரணையில் எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
#WATCH | In a self-made video, JDS MP Prajwal Revanna says, "I will appear before SIT on 31 May."
He said, "...When elections were held on 26th April, there was no case against me and no SIT was formed, my foreign trip was pre-planned. I came to know about the allegations while… pic.twitter.com/7Rt5b0Opi4
— ANI (@ANI) May 27, 2024
பாலியல் குற்றச்சாட்டு:
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல பெண்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி, அதை வீடியோவாக எடுத்ததாக பிரஜ்வல் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை, இந்தியாவுக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவிக்கையில், பிரஜ்வல் எங்கிருக்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவருடைய வெளிநாட்டுப் பயணம் பற்றி எனக்குத் தெரியாது. இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து காவல்துறையில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் கோரிக்கை அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, வரும் மே 31 ஆம் தேதி, பாலியல் புகார் குற்றச்சாட்டு குறித்து, கர்நாடக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜராவதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Also Read: நம்மை கொலை செய்து விடுவார்கள்”; முதலில் முந்திக்கொண்ட குற்றவாளி; போலீஸிடம் சிக்கியது எப்படி?