Karnataka ABVP Leader Arrested: ஆபாச பேச்சு... மாணவிகளின் அந்தரங்க வீடியோ: கைதான ஆர்.எஸ்.எஸ் மாணவரணித் தலைவரின் மறுபக்கம்!
ABVP Leader Arrested: பெண்கள் மற்றும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் மாணவரணித் தலைவரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர்.
ABVP Leader Arrested: பெண்கள் மற்றும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் மாணவரணித் தலைவரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் ஷிவமோகாவில், சமூக ஊடகங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோவைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜீன் 18ஆம் தேதி கைது செய்தனர்.
கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தலைவர் பல பெண்களுடன் உடலுறவு கொண்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட பிரதீக் கவுடா, கர்நாடகாவின் தீர்த்தஹள்ளி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். கவுடா பல இளம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு அவர்களிடம் ஆபாசமாக பேசி அவற்றை பதிவு செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரதீக் கவுடாவின் மொபைலில் இருந்து பரப்பப்பட்டு ஷிவமோகா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) தீர்த்தஹள்ளி பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரதீக் கவுடா மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து அவர் மாணவிகளை மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் கர்நாடக மாநிலத்தில் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை யாரும் மேற்கொண்டு பகிர வேண்டாம் எனவும் வீடியோவை பகிர்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
"தீர்த்தஹள்ளியில் சில மாணவிகளுடன் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தலைவர் பாலியல் செயல்களில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. புகாரின் பேரில், கைது செய்து, அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புகிறோம்," என ஷிவமோகா போலீஸார் தெரிவித்தனர்.