மேலும் அறிய
Advertisement
மருத்துவர் வீட்டில் 97 சவரன் கொள்ளை - தீரன் பட பாணியில் 2 கைரேகைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் போலீஸ்
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 97 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லுத்தரன் தெருவை சேர்ந்தவர் அமல குமார். இவரது மனைவி மருத்துவர் ஜலஜா தேவகுமாரி (59). இவர் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவரும் மகனும் இறந்து விட்டனர். இதனால் வீட்டில் ஜலஜா தேவகுமாரி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 97 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து டாக்டர் ஜலஜா தேவகுமாரி நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.டி.எஸ்.பி. நவீன் குமார் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த வீட்டில் இரண்டு கைரேகைகள் சிக்கியுள்ளது. அந்த கைரேகைகளை போலீசார் பழைய கொள்ளையர்களின் கைரேகை களுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டை சுற்றியுள்ள பகுதி உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
டாக்டர் ஜலஜா தேவ குமாரி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டே மர்ம நபர்கள் கைவரிசை ஈடுபட்டுள்ளதால் தெரிந்த நபர்களே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் 2 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜலஜா தேவ குமாரி வீட்டிற்கு சமீபத்தில் யாராவது நபர்கள் வந்து சென்றார்களா என்பது குறித்த விவரங்களையும் கேட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீரன் பட பாணியில் வெறும் 2 கை ரேகைகளை கையில் வைத்து கொண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவிற்கு கடத்த முயன்ற 175 கிலோ குட்கா பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது அதனை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கடத்தல் கும்பல் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தொடர்ந்து கஞ்சா ,குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு காரில் பதுக்கி கேரளாவிற்கு குட்கா பொருட்கள் கடத்துவதாக மகேஷ்வர்ராஜ் உதவி ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் மார்தாண்டம் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியான வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தியபோது காரில் சாக்கு மூட்டைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மருதங்கோடு பகுதியை சேர்ந்த கில்டஸ் 36 ஐ கைது செய்து மார்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion