மேலும் அறிய
Advertisement
குமரியில் ரயிலில் தொடரும் கஞ்சா கடத்தல்... 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; கடத்தியது யார்... ? - போலீஸ் விசாரணை
கடந்த 2 வாரத்துக்கு முன்புதான் குமரி மாவட்டத்திற்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்து.
புனேயில் இருந்து குமரி வந்த ரெயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 24 கிலோ கஞ்சா ரயில் நிலையங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை களைக்கட்டி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து விநியோகம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி உள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் கஞ்சாக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இதனால் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் புனேயில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரணியல் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் ஆகியோர் இரணியல் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது ரெயிலின் ஒரு பெட்டியில் 6 பொட்டலங்கள் அனாதையாக கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ வீதம் மொத்தம் 12 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தியது யார்? எங்கிருந்து கடத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 வாரத்துக்கு முன்புதான் குமரி மாவட்டத்திற்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்து. இதே போல் 5 நாட்களுக்கு முன்னர் மேலும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 12 கிலோ கஞ்சா பிடிபட்டது இந்த சம்பவம் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion