மேலும் அறிய
Advertisement
வீட்டு செலவிற்கு பணம் இல்லை.....கணவனை மண்டையை பிளந்த மனைவி...!
சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் வீட்டு செலவுக்கு பணம் தராத கணவனின் மண்டையை அவரது மனைவி அரிவாளால் பிளந்துள்ளார். புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.
சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது இருவரும் மாறி மாறி சண்டையிட்ட நிலையில் பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் தலைக்கேறிய சுபலதா வீட்டின் சமையல் அறைக்கு சென்று அங்கு வைத்திருந்த வெட்டுக்கதியால் கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு வலி தாங்க முடியாமல் அலற அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு அங்கு கூடினர். பின்னர் அரிவாள் வெட்டு பட்டு இரத்தம் சொட்ட சொட்ட சரிந்து கிடந்த பிரபுவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று, பின்னர் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
வீட்டு செலவிற்கு பணம் வழங்காத கணவரை அரிவாளால் மனைவியே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion