மேலும் அறிய

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!

இதற்குமுன் ஒரு முறை மாணவி தேர்வு எழுதும் போது செல்போனுடன் பேராசிரியரிடம்  பிடிபட்டதாக கூறப்படுகிறது, இது 2-வது முறை என்பதால் ஆசிரியர் மிகவும் கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்திய மாணவியை பேராசிரியர் கண்டித்து வெளியே அனுப்பியதால் மன உளைச்சலுக்கு உள்ளான முதலாம் ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பிரபல  தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் அனைத்து வகையான மருத்துவ படிப்புகளை பயின்று வருகின்றனர்.

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!
இந்நிலையில் இன்று காலை, சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பு படிக்கும் அம்பத்தூர், புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி(20) என்ற மருத்துவக் கல்லூரி மாணவி பயின்று வருகிறார்.  கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சோனாலி தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்தால் அப்போது தேர்வு அறைக்கு வந்த தேர்வு கண்காணிப்பாளர் சோனாலி செல்போன் வைத்திருந்ததை அறிந்து  செல்போனை பிடுங்கி கொண்டு அவரை கண்டித்து வசைபாடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!
தேர்வு எழுதிய ஏழாவது மாடியிலிருந்து கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு மூன்றாவது மாடிக்கு வந்த சோனாலி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் தலை மற்றும் உடல்களில் பலத்த காயமுற்று சோனாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சோனாலியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சோனாலி தற்கொலைக்கு காரணம் தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தி கையும் களவுமாகப் பிடித்து வெளியேறியதால் மனஉளைச்சலுக்கு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛முதற்கட்ட விசாரணையி இதற்குமுன் ஒரு முறை மாணவி தேர்வு எழுதும் போது செல்போனுடன் இதே பேராசிரியரிடம்  பிடிபட்டதாக கூறப்படுகிறது, இது 2-வது முறை என்பதால் பேராசிரியர் மிகவும் கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்று முதற்கட்ட விசாரணையில் துவங்கியுள்ளோம். இருந்தும் இந்த வழக்கில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதால் கல்லூரி நிர்வாகத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து மாணவியின் உடன் படிக்கும் மாணவ மாணவிகளிடம் தற்போது விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளோம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணை நடந்து முடிந்த பிறகே தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியே வரும்,’ என தெரிவித்தனர்.

தேர்வு அறையில் செல்போன்: வசைபாடிய பேராசிரியர்; 3வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி வளாகத்திலேயே மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget