மேலும் அறிய
Advertisement
Crime : மதுபோதை.. அம்மனை தரிசனத்துக்கு அடம்பிடித்த நண்பன்.. ஸ்ரீபெரும்புதூரில் விபரீதம்..
நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபரை 24 மணி நேரத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு குழு சடலமாக மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரில் வாடகை வீட்டில் தங்கி இருங்காட்டுகொட்டை கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விநாயகம் மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணகிரியை சேர்ந்த தீபக் ஆகிய இருவரும் நேற்று மாலை ஆறு 6.30மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி கரை அருகே மது அருந்தி உள்ளனா்.
பின்னர் மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை நேற்று இரவு11 மணி வரை தேடினர்.
பின்னர் காலை ஏழு மணியிலிருந்து நான்கு மணி வரை மீண்டும் தேடிய நிலையில் விநாயகம் கிடைக்காததால் தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை தேடிய நிலையில் 6:00 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்பு குழு சிலிண்டரை தன் முதுகில் கட்டிக்கொண்டு கீழே இறங்கி தேடியதில் விநாயகத்தின் சடலம் பிடிபட்டது.
உடனே கரைக்கு எடுத்து வந்து உடற்கூர் ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு ஏரியில் மூழ்கிய விநாயகத்தை 24 மணிநேரத்திற்கு பின் சடலமாக மீட்டது ஸ்ரீபெரும்புதூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவத்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , மது போதை தலைக்கேறிய விநாயகம் மட்டும் ஏரியின் நடுவில் உள்ள அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தீபக்கிடம் அடம் பிடித்துள்ளார். தீபக் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏரியின் நடுவில் உள்ள அம்மன் கோயில் அருகே நீந்தி சென்றபோது திடீரென மூச்சு தடுமாறு நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர் தீபக் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய விநாயகத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion