மேலும் அறிய

குளித்துவிட்டு வந்த சித்தி.. கொடூரமாய் கொலை செய்த மகன், காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன ?

"காஞ்சிபுரத்தில் ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில், சித்தியை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது"

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, துளசிராமன் மற்றும் ஏழுமலை ஆகிய 3 பேரும் சகோதரர்கள். 3 பேரும் நல்லூர் ஏரி அருகே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி அருகருகே வசித்து வருகின்றனர். இதில் சகோதரர்களில் மூத்தவரான சுப்பிரமணியின் மூன்றாவது மகன் துரை, ஏரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கால்நடை கொட்டகை கட்டியுள்ளார்.

இடத்தை ஆக்கிரமிப்பதில் பிரச்சனை

அதேபோன்று சகோதரர்களில் இளையவரான ஏழுமலை ஏரிக்கு சொந்தமான இடத்தில், குளியலறை கட்ட முயற்சி எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஏழுமலையை மிரட்டிய துரை, அந்த இடம் முழுவதும் எனக்கு தான் சொந்தம் என அவரை குளியலறை கட்ட விடாமல், மீண்டும் ஏரியை ஆக்கிரமித்து, துரை குளியலறை கட்டிக் கொண்டுள்ளார். இந்தநிலையில் துளசிராமன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர், வீட்டிற்கு எதிரே உள்ள ஏரிக்கு சொந்தமான இடத்தில், தற்காலிகமாக மாட்டு கொட்டகை கட்ட முயற்சி எடுத்துள்ளார்.

சகோதரர்களுக்கு இடையே சண்டை

சுப்பிரமணியின் மகன் துரை அந்த இடம் முழுவதும் எங்களுக்கு தான் சொந்தம். இந்த இடத்தில் யாரும் எதுவும் கட்டக்கூடாது, என சுமதியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இருதரப்பிற்கும் அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து சண்டை நடந்து வந்தாலும், துளசிராமன் மற்றும் சுமந்து இருவரும் ஏரி மண்ணைக் கொட்டி அந்த இடத்தில், மாட்டு கொட்டகை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் இடம் எங்களுக்கு தான் சொந்தம் என தொடர்ந்து சுமதி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை சுமதி குளித்து முடித்துவிட்டு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, திடீரென சுப்பிரமணியின் மகன் துரை சுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுமதியிடம் தகாத வார்த்தைகளில் துரை பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமா இருந்த சுமதியும் தகாத வார்த்தையில், துரையைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து, சரமாரியாக தலையில் வெட்டி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த சித்தி

சுமதி அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில், இருந்த சுமதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமதியை உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் கொலை செய்துவிட்டு தப்பிச் சேர்ந்த துரையை பிடிக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு முயன்ற, அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சித்தியை மகன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை என்ற பகுதியில், நகைக்காக பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அடுத்த சில நாட்களிலேயே, குடும்பத்த தகரதால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
மாறாத தலைநகர்..! மூன்று குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
WhatsApp விளம்பரத்தை நம்பினால் இவ்வளவு ஆபத்தா? புதுச்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்
ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK govt: தவெக அரசில் தொடரும் நலத்திட்டங்கள்; மாணவ, மாணவிகளுக்கு வந்த ரூ.1000 உதவித்தொகை!
TVK govt: தவெக அரசில் தொடரும் நலத்திட்டங்கள்; மாணவ, மாணவிகளுக்கு வந்த ரூ.1000 உதவித்தொகை!
Karuppu Release Update: சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் ”மாலை வர கருப்பு ரிலீசாக வாய்ப்பில்லையாம்” தியேட்டர் ஓனர் தகவல்
சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம் ”மாலை வர கருப்பு ரிலீசாக வாய்ப்பில்லையாம்” தியேட்டர் ஓனர் தகவல்
மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
மாறாத தலைநகர்..! மூன்று குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
Udhayanidhi: ”ஏது ரீல்ஸ் ஆட்சியா? உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே” உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்
”ஏது ரீல்ஸ் ஆட்சியா? உங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே” உதயநிதியை ரவுண்டு கட்டிய தவெக பாய்ஸ்
Internal conflict in AIADMK : தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
தவெகவிற்கு ஆதரவு.! தூக்கியடிக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்கள்- இபிஎஸ், எஸ்பிவி அடுத்த திட்டம் என்ன.?
Tamilnadu Round Up: டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் வார்னிங், குறைந்த வெள்ளி, உயர்ந்த தங்கம் விலை, EPS & ஸ்டாலின் ஆலோசனை - தமிழ்நாட்டில் இதுவரை
TN Govt: மீண்டும் சிக்சர் அடித்த விஜய்.. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை..
TN Govt: மீண்டும் சிக்சர் அடித்த விஜய்.. 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை..
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
Embed widget