மேலும் அறிய
Advertisement
கொடூரம்; பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது!
+1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் .
பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அண்மையில் +2 , +1 அரசு பொது தேர்வு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 பேர் பிளஸ் டூ தேர்வினையும், 13,114 பேர் +1 தேர்வையும் எழுதினர். தேர்வுக்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பறக்கும் படை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் நியமிக்கப்பட்டனர். நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.
துவங்கியது பதினொன்றாம் வகுப்பு தேர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதினொன்றாம் (+1) வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 பேர் மாணவர்களும், 7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் அரசு பொது தேர்வு நன்னடத்தை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதனை எடுத்து தேர்வு துவங்கவதற்கு முன் தேர்வு அறிக்கை சென்ற மாணவர்களை பரிசோதனைக்கு பின்னே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவ , மாணவிகள்
மேலும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் ஒன் அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பதினொன்றாம் வகுப்பு தேர்வு அரியர் தேர்வு எழுத வந்துள்ளார்.
பதற்றத்துடன் காணப்பட்ட மாணவி
அம்மாணவிக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினார். எனினும் அவர் பதட்டத்துடன் காணப்படுவதாக கூறியதை தொடர்ந்து தேர்வு அலுவலரான ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் ஆசிரியர் உதவ வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு எழுத சென்றபோது ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் . அதன் பேரில் அவர்கள் காவல் நிலையத்தில், இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு
உடனடியாக இதுகுறித்து பாலு செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்று காவல்துறையினர் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் ஆய்வாளர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion