மேலும் அறிய
Advertisement
வீடு வாடகைக்கு எடுத்து நூதன முறையில் மோசடி.. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் கைது.. பின்னணி என்ன?
முதியவர்களை குறிவைத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர் மோசடியில் ஈடுபடும் முன்னாள் பாஜக பிரமுகரை போலீசார் கைது.
முதியவர்களை குறிவைத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர் மோசடியில் ஈடுபடும் முன்னாள் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடையார் (Adayar News) : சென்னை அடையார் பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் பவானி (52). இவருக்கு விருகம்பாக்கம் கம்பர் தெருவில் 1200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சிவ அரவிந்தன் என்பவர் பவானியை அணுகியுள்ளார். அப்போது அடையாறில் தான் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், தங்களது வீட்டை வாடகைக்கு கொடுத்தால் இங்கு நிறுவனத்தை நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மாதம்தோறும் வாடகை
இதனை நம்பிய பவானி அட்வான்ஸ் ஒரு லட்சம் ரூபாய் எனவும் மாதந்தோறும் வாடகை 20,000 என ஒப்பந்தம் செய்து வீட்டை வாடகைக்கு சிவ அரவிந்தனுக்கு கொடுத்துள்ளார். பின்னர் ஆறு மாதம் சரியாக வாடகை தந்த சிவ அரவிந்தன், அதன் பிறகு சரியாக வாடகை பணம் தராததால் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த வீட்டை சிவா அரவிந்தன் தனது வீடு எனக் கூறி இரண்டு பேருக்கு தலா 8 லட்சம் என லீசுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
நூதன மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி இதுகுறித்து சிவ அரவிந்தனிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் , பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, பவானி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், வழக்கறிஞரான சிவ அரவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சியில் முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்துள்ளார். இதே போல சிவா அரவிந்தன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரனிடம் ஏழு லட்ச ரூபாயும், அடையாறில் லீனா பெர்னேண்டஸ் என்பவரிடம் 2 கோடி ரூபாயும் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீண்டும் கைது
இதேபோல தொடர்ச்சியாக சிவ அரவிந்தன் முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. முதியவர் பவானி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் சிவ அரவிந்தனை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவரிடம் எத்தனை முதியவர்களிடம் , இது போல் மோசடி செய்துள்ளார் என தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion