மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை, சிறப்பு உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரம், என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும், கூறப்படுகிறது. மேலும் காவலர் வீட்டிற்கு சென்று பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் காவலராக இருந்து வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்ததால் அவரை, உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண் அடிக்கடி சோமசுந்தரத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் அந்தப் பெண் பிரியாவின் உறவினரிடம், பிரியாவை பற்றி கூறியதாக தெரிகிறது. இதனால் பிரியா சோமசுந்தரத்தின் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா, அவரை தேடி பெருநகர் காவல்நிலையத்திற்கு வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் சோமசுந்தரம் இடம் சண்டை பொட்டு உள்ளர. இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே, வைத்து சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவை தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையமே பரப்பரப்பாக மாறியது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion