Kallakurichi Violence: திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: கலவரத்தால் பொங்கிய அண்ணாமலை!
K Annamalai: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து அண்ணாமலை டிவீட்.
சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்வும் பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?
— K.Annamalai (@annamalai_k) July 17, 2022
ஆளும் @arivalayam அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார், (1/3)
இந்த சம்பவத்தினால் மக்கள் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும், காவல்துறையின் மீதிருந்த மரியாதையும் மக்களிடையே குறைந்துவிட்டதாகவும் அண்ணாமலை டிவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. (2/3)
— K.Annamalai (@annamalai_k) July 17, 2022
தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் @BJP4TamilNadu இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். (3/3)
— K.Annamalai (@annamalai_k) July 17, 2022
என்ன நடந்தது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜீலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி கல்லூரி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற்கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கையை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு காரணமான கல்வி நிறுவனத்தை மூட வேண்டும், கல்வி நிறுவனத்தின் தாளாளரை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை வேண்டும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பேரணியாக வந்த ஸ்ரீமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பு கட்டைகளை தாண்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள் கல்வி நிறுவன தாளாளரை கைது செய்ய வேண்டும், கல்வி நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவியின் உடலை வாங்க மறுத்து இன்று மாணவி உயிரிழந்தது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறி மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த, போராட்டக்காரர்களை கட்டுபடுத்த காவல்துரையினர் தடியடி நடத்த தொடங்கினர்.