மேலும் அறிய

Crime: காதலிக்கு கொடுக்க 10 பவுன் செயின் திருட்டு ... காதலர் தின ஐடியா.. கம்பி எண்ணும் நகைக்கடை ஊழியர்..!

காதலர் தினத்துக்கு காதலிக்கு கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் ஒருவர் கம்பி எண்ணும் சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

காதலர் தினத்துக்கு காதலிக்கு கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் ஒருவர் கம்பி எண்ணும் சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட காதலர்கள் தங்கள் இணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்கள் கொடுத்து அசத்தினர். அதேசமயம் மகிழ்ச்சியாக காதலர் தினம் கொண்டாட நினைத்து சிலர் பிரச்னையில் சிக்கிய சம்பவமும் ஆங்காங்கே நடைபெற்றது. அப்படியான ஒரு சம்பவம் தான் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகை கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த இங்குள்ள நகைக்கடையில் கீழ்த்தளத்தில் கடந்த 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடை திறக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அனைத்து நகைகளும் சரியாக உள்ளதா? என மேலாளர் கார்த்திக் தலைமையில் ஊழியர்கள் சரி பார்த்துள்ளனர்.அப்போது மொத்த நகையில் 10 பவுன் குறைந்தது தெரியவந்தது. 

தவறாக கணக்கு பார்த்துவிட்டோமோ என பதறிய ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை சோதனையிட 10 பவுன் மதிப்பிலான செயின் காணாமல்போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர் கார்த்திக் நகைக்கடையில் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர். இதில் நகைக்கடையில் கீழ்த்தளத்தில் கடையில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் தர்ஹா காலனி பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸூக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

அவர் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க செயினை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருடப்பட்ட தங்க நகையை தனது காதலியின் அக்காவான கோயம்பத்தூர் அன்னை சத்யா வீதியை சேர்ந்த திவ்யா என்பவரிடம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து நகைக் கடை மேலாளர் கார்த்திக் தெற்குவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் நகைக்கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து நகையை மீட்டனர். மேலும் மதுரை கடையில் வேலை பார்த்து வந்த அப்துல், திருச்சியில் இதே கடையின் கிளை திறக்கப்படுவதை அறிந்து அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். 

மேலும் அவர் கோவையைச் சேந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் காதலர் தினத்திற்கு அவருக்கு கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார். இந்த ஆண்டு நகையை பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்ட அவர், திவ்யாவிடம் கடையில் இருந்த 10 பவுன் செயினை போட்டோ எடுத்து அனுப்பி கவரிங் செயின் தயார் பண்ண சொல்லி செயினை இடம் மாற்றியுள்ளார். அதேசமயம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாத்தா இறந்துவிட்டதாக கூறிவிட்டு கடைக்கு லீவு போட்டு சென்றதும் தெரிய வந்தது. 

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget