(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : ஹீலியம் கியாஸ் சிலிண்டர்.. பிளாஸ்டிக் கவர்.. சினிமா பாணியில் இளம்பெண் தற்கொலை.. என்ன நடந்தது?
கோவை அருகே பெண் மென்பொறியாளர் சினிமா பாணியில் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்து வருபவர் வினுபாரதி. இவரது மனைவி இந்து. வினுபாரதியின் சொந்த ஊர் அருகே உள்ள நல்லகண்டன்பாளையம். இந்துவின் சொந்த ஊர் கோவை அருகே உள்ள தோட்டக்காட்டூர். இந்து கோவையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் வினுபாரதியுடன் இணைந்து சென்னையில் தங்கியே பணியாற்றி வந்தார்.
வினுபாரதி – இந்து தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் நடைபெற்றது. சென்னையில் கணவருடன் வசித்து வந்த இந்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் தனது அறையில் தூங்குவதற்காக இந்து சென்றுள்ளார். பின்னர், நேற்று இரவு சாப்பிடுவதற்காக அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் இந்து திறக்கவில்லை. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த இந்துவின் பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அந்த அறையில் முகம் முழுவதும் பிளாஸ்டிக் பை சுற்றப்பட்டு, அந்த பிளாஸ்டிக் கவருக்குள் கியாஸ் யூடியூப் சொருகப்பட்ட நிலையில் இந்து சடலமாக கிடந்தார்.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகா பிளாஸ்டிக் கவரால் முகத்தை சுற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்வார். அதே முறையை பின்பற்றிதான் இந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட இந்து, இதற்காக ஹீலியம் கியாஸ் சிலிண்டரை இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார் என்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
திருமணம் செய்து நான்கு மாதங்களே ஆன நிலையில், இளம்பெண் வித்தியாசமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பணி அழுத்தம் காரணமா? கணவருடனான பிரச்சினை காரணமா? குடும்ப பிரச்சினையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலீசார் விசாரணையில் இந்து தனது செல்போன், மடிக்கணினியில் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக இணையத்தில் தேடியதையும் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050