மேலும் அறிய

வங்கிகளில் அதிகரிக்கும் மோசடி: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்! கடன் மோசடி உச்சம், உங்கள் பணம் பாதுகாப்பானதா?

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, 2024-25 நிதியாண்டில் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு அதிகரித்துள்ளது.

சென்ற சில ஆண்டுகளாகவே இந்திய வங்கிகளில் பண மோசடிகள் அதிகரித்துள்ளன. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் வங்கிகள் 5,092 மோசடிகளைப் புகாரளித்துள்ளன. இதன் மதிப்பு ரூ. 21,515 கோடியாகும். இதில் பெரும்பாலானவை கடன் மோசடிகள் ஆகும். இந்த விவரங்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலமாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் வங்கிகள் மொத்தம் 18,386 மோசடிகளைப் புகாரளித்தன. அதன் மதிப்பு ரூ. 16,569 கோடியாகும்.

வங்கிகளில் அதிகரிக்கும் மோசடி: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்! கடன் மோசடி உச்சம், உங்கள் பணம் பாதுகாப்பானதா?

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, 2024-25 நிதியாண்டில் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 122 மோசடி வழக்குகளை மீண்டும் ஆய்வு செய்து ரூ. 18,336 கோடி மதிப்பிலான மோசடிகளைப் புதிதாகப் புகாரளித்ததுதான் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மோசடிகள் நடந்த தேதியின் அடிப்படையில் பார்த்தால், 2024-25 நிதியாண்டில் மொத்த மோசடிகளில் 66.8 சதவீத மோசடிகள் கார்டு மற்றும் இணையதள மோசடிகளாகும். மதிப்பு அடிப்படையில் பார்த்தால், கடன் தொடர்பான மோசடிகள் 33.1 சதவீதமாக இருக்கிறது. 2024-25 நிதியாண்டில் தனியார் துறை வங்கிகள் புகாரளிக்கப்பட்ட மொத்த மோசடிகளில் 59 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.

அதேநேரம், பொதுத்துறை வங்கிகள் மோசடி செய்யப்பட்ட பணத்தில் 70.7 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தன. தனியார் வங்கிகளில் கார்டு மற்றும் இணையதள மோசடிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன. ஆனால், கடன் தொடர்பான மோசடிகள் பண மதிப்பில் அதிகமாக இருந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடன் தொடர்பான மோசடிகள் எண்ணிக்கையிலும், பண அளவிலும் அதிகமாக இருந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

2024-25 நிதியாண்டில் அனைத்து வங்கி குழுக்களிலும் கார்டு அல்லது இணையதள மோசடிகளின் பங்கு எண்ணிக்கை மற்றும் பண அளவு இரண்டிலும் குறைந்துள்ளது. கடன் தொடர்பான மோசடிகளின் பங்கு , எண்ணிக்கை மற்றும் பண அளவு இரண்டிலும் அனைத்து வங்கி குழுக்களிலும் அதிகரித்துள்ளது (பொதுத்துறை வங்கிகளின் பண அளவைத் தவிர). இதற்கு முக்கிய காரணம், மீண்டும் வகைப்படுத்தப்பட்ட மோசடிகளில் கணிசமான பகுதி கடன்களுடன் தொடர்புடையதாக இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வங்கிகளில் அதிகரிக்கும் மோசடி: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்! கடன் மோசடி உச்சம், உங்கள் பணம் பாதுகாப்பானதா?

அதாவது, வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், மோசடி செய்யப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடன் மோசடிகள் மற்றும் இணையதள மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளில் மோசடிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்யப்படும் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கி இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக செய்து வருவதால் அதில் மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. மோசடிகள் குறித்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றன. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget