மேலும் அறிய
Advertisement
சமைக்காத மனைவி! சந்தேகித்து போட்டுத்தள்ளிய கணவன்! பரிதவிக்கும் ஒரு வயது குழந்தை..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள கன்னி அம்மன் கோவில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன் (30 ). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது மனைவி அனிதா (28 ). இருவரும் கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். அதேபோன்று அவ்வப்பொழுது கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வந்து வருகிறார். திருமணமானதிலிருந்தே அனிதா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர்.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு
அதேபோன்று வெங்கடேஷ் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் வெங்கடேஷ் நேற்று மதியம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி அனித்தா உணவு சமைக்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
அதேபோன்று வெங்கடேசன் மனைவி பல ஆண் நண்பர்களுடன் பேசி வருவது குறித்து அவருடன் கேள்வி எழுப்பி உள்ளார். மனைவி பல ஆண் நண்பருடன் பேசுவது குறித்து இருவருக்கிடையே அவ்வப்பொழுது சண்டை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குவாதத்தில் இது குறித்து வெங்கடேஷ் மீண்டும் சண்டையிட்டுள்ளார்.வாக்குவாதம் அதிகமான நிலையில், ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவி அனித்தாவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
உடனே வெங்கடேஷ் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மனைவியை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். அரசு மருத்துவமனையில் வெங்கடேசிடம் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டதில் வெங்கடேஷ் கழுத்தில் குத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி அனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து வெங்கடேச கைது செய்த போலீசார் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கொலை தொடர்பான காரணம் குறித்து வாக்குமூலம் கேட்டறிந்தனர். இதனை அடுத்து வெங்கடேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். உணவு சமைக்காத மனைவி மற்றும் மனைவியின் மீது இருந்த சந்தேகம் ஆகிய காரணத்தினால் மனைவியை கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வயதில் ஆண் குழந்தை
ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தந்தை தாயை கொலை செய்து விட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், ஒரு வயது குழந்தை தான் யார் என்று கூட அறியாது இருக்கும் நிலையில், ஆதரவு இல்லாமல் தவித்து வருகிறது. கோபத்தால் ஒரு குடும்பம் சரிந்தது மட்டுமில்லாமல் ஒரு வயது குழந்தை எதிர்காலமும் பாதிப்படைந்து இருக்கிறது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion