மேலும் அறிய

சென்னை : திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி.. தோழிக்கு மெசெஜ் அனுப்பி விட்டு தற்கொலை

செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய குடும்பத்தினர் நானும் விஜய்யும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த ஜோடி ஒன்று தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையின் புறநகர் பகுதியாக பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கும் செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்துள்ளது. தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த விஜய்க்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இவர்களின் தொடர்பு பற்றி இருவீட்டாருக்கும் ஒரு கட்டத்தில் தெரிய வந்ததை தொடர்ந்து விஜய், செல்ஃபியா மேரி  இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்களது கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரையும் தவிக்க விட்டு விட்டு அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 

இப்படியான நிலையில் செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய குடும்பத்தினர் நானும் விஜய்யும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் இருவரும் தற்கொலை செய்யப் போகிறோம்” என அவர் தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரேகா உடனடியாக பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரை மாய்த்துக் கொண்டனர். வீட்டில் வரவேற்பறையில் விஜய் சால்வையில் தூக்கு போட்டும், செல்ஃபியா மேரி படுக்கை அறையில் தூக்கு போட்டும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget