Cyber crime: "டெலிகிராமில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம்" - ரூ. 40 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன அதிகாரி
நீங்கள் முதலீடு செய்வது நம்பிக்கை கூறிய நிறுவனமோ அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமோ முதலீடு செய்தால் உங்களுக்கு அது திரும்ப வர வாய்ப்பு இருக்கின்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சார்ந்த ராமமூர்த்தி (வயது 58) தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தனக்கு பணி ஓய்வின் போது கிடைத்த 50 லட்சத்தில் 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை டெலிகிராமிலிருந்து வந்த லிங்கை நம்பி இணையவழி மோசடிக்காரர்கள் முதலீடு செய்யுங்கள் அதிக லாபம் கொடுக்கிறோம் என்று கூறியதை நம்பி முதலீடு செய்யும் பணத்திற்கு தினம் தினம் உங்களுக்கு லாபம் கொடுக்கிறோம் என்று கூறியதாலும் பல்வேறு வீடியோக்களை பார்த்து அதற்கான உங்கள் மதிப்பீட்டை கூறினால் அதற்கும் பணம் தருகிறோம் என்று கூறியதை நம்பிய மேற்கண்ட தனியார் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி சிறிது சிறிதாக 17 முறை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் சொன்னதைக் நம்பி பணத்தை அனுப்பி கடைசியில் அவர் முதலீடு செய்த பணத்தையும் அவர்கள் லாபம் கொடுக்கிறோம் என்ற பணத்தையும் அவருடைய வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் போன போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தார்.
அவர் இன்று இணைய வழி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார் அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக புதுச்சேரி சைபர்கிரைம் காவல் நிலையத்திற்கு புதியதாக பொறுப்பேற்றிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி மனுஷ் அவர்கள் கூறியது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தை பொதுமக்கள் இதுபோன்ற இணைய வழி மோசடிக்காரர்களை நம்பி இழந்து இருக்கின்றார்கள். முக்கியமாக டெலிகிராம் இன்ஸ்டாகிராமில் வருகின்ற லிங்கில் சென்று முதலீடு செய்தால் 100% உங்களுடைய பணத்தை இழப்பீர்கள்.
நீங்கள் முதலீடு செய்வது நம்பிக்கை கூறிய நிறுவனமோ அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமோ முதலீடு செய்தால் உங்களுக்கு அது திரும்ப வர வாய்ப்பு இருக்கின்றது. இதுபோன்று யார் என்றே தெரியாத நபர்களிடம் முதலீடு செய்து உங்களுடைய பணத்தை இழக்க வேண்டாம். ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற முகம் தெரியாத நபர்களிடம் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முக்கியமாக டெலிகிராம் இன்ஸ்டாகிராமில் வருகின்ற அனைத்து முதலீட்டு வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் பொய்யானவே ஆகவே பொதுமக்கள் அது போன்ற லிங்குகளையோ அல்லது வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்துவதோ தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்