தீராத ஆசை! வேறு நபர்களுடன் மனைவி உல்லாசம்! கணவரும், காவல் அதிகாரியும் கைது!
பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு நபர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு நபர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே கங்கனாடி டவுன் பகுதியில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
புகாரில், “எனது கணவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். பணத்தாசையால் அவரது நண்பர்களுடன் உறவில் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்.
அதனால் நானும் கணவர் கூறியபடி வேறு நபரிடம் உல்லாசமாக இருந்தேன். இதை எனது கணவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதை காட்டி தினமும் என்னை மிரட்டி வந்தார். மேலும் என்ன அடித்தும் தகாத வார்த்தைகளா திட்டியும் வந்தார்.
இதனால் நான் எனக்கு தெரிந்த காவூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் அதிகாரி சந்திரநாயக் என்பவரிடம் புகார் தெரிவித்தேன். இதையடுத்து அவர் எனது வீட்டிற்கு வந்து எனது கணவரின் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அழித்தார்.
ஆனால் அதன்பின்னர் எனது கணவரை கைக்குள் போட்டுக்கொண்டு அவரது அனுமதியுடன் காவல் அதிகாரி சந்திரநாயக் என்னுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
அதோடு வேறு சிலரோடும் உறவில் இருக்க வேண்டும் என சந்திரநாயக் என்னை கட்டாயப்படுத்தி வருகிறார். எனவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்” என அந்த பெண் புகாரில் தெரிவித்தார்.
விசாரணையில் கட்டடத்தொழிலாளியான அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பணத்துக்காக மனைவியை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளது தெரியவந்தது.
மேலும் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இந்த செயலை செய்து வந்துள்ளார். விசாரிக்க சென்ற காவல் அதிகாரி சந்திரநாயக்கும் பெண்ணை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக கங்கனாடி போலீசார், சந்திராயக் மற்றும் கணவரை கைது செய்துள்ளனர்.





















